போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடிப்பதால், இவருக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் வருகிறது.
தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, சேவ் சக்தி எனும் அமைப்பு மூலம் சமூக நலப் பணிகளையும் செய்து வருகிறார்.
தற்போது இந்த அமைப்பு மூலம், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கான 2 டன் உணவுப் பொருள்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் வரலட்சுமி. இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்க்க ‘கோவிட் உதவிஎண்களையும்’ வரலட்சுமி உருவாக்கியுள்ளார். இந்த சேவையையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அது தொடர்பான விவரங்களை நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்ட
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளப
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் &lsq
நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
பிக் பாஸ் அபியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
