More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அலோபதி குறித்த விமர்சனம் - டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்டார் ராம்தேவ்
அலோபதி குறித்த விமர்சனம் - டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்டார் ராம்தேவ்
May 24
அலோபதி குறித்த விமர்சனம் - டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்டார் ராம்தேவ்

பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோகா குரு என்றும் சிலர் கூறுகின்றனர். பதஞ்சலி நிறுவனம் மூலம் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ராம்தேவ் கூறுகிறார். இவர் கொரோனா வைரசை தடுக்கும் என்று எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாத கொரோனாநில் என்ற மருந்து பொருளை விற்பனை செய்து வருகிறார்.



சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பதஞ்சலி நிறுவன தலைவர் ராம்தேவ் பேசிய போது, அலோபதி சிகிச்சை முறையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சிகிச்சை அளிக்கப்படாதது அல்லது ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்தவர்களை விட அதிகம். அலோபதி முட்டாள்தனமான மற்றும் தோல்வியடைந்த சிகிச்சை முறை என தெரிவித்தார்.



மேலும், முட்டாள்தனமான அறிவியல் மற்றும் மருந்துகள் குறிப்பாக ரெம்டெசிவிர், ஃபவிப்ளூ மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அனுமதிக்கப்பட்ட பிற மருந்துகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தோல்வியடைந்து விட்டன என்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ராம்தேவ் மீது பொருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



மேலும், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கூறிய ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ராம்தேவ் தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ்வர்தன், அலோபதி தொடர்பாக பேசிய கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என ராம்தேவுக்கு கடிதம் எழுதினார்.



இந்நிலையில், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என தான் கூறிய கருத்துக்காக டாக்டர்களிடம் மன்னிப்பு கேட்டார் ராம்தேவ்.



இதுதொடர்பாக, ராம்தேவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஹர்ஷ்வர்தனின் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அலோபதி மருத்துவம் தொடர்பான என்னுடைய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என பதிவிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep06

கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு

Mar03

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

Mar27

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப

Sep28

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம

Nov17

சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை

Mar14

சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல

Apr21

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்

Aug26

 ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

Jun12
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (19:38 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (19:38 pm )
Testing centres