கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வ
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
