மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதம் ஆகிறது. இந்த தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் 6 மாதம் நிறைவடைந்ததையொட்டி, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தலாம் என தகவல் வெளியானது. குறிப்பாக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி-அரியானா எல்லையான சிங்கு எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, விவசாயிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் விவசாய பெருமக்கள் தங்கள் வீடுகள், கடைகள், டிராக்டர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்படி விவசாய சங்க தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டம் மற்றும் தர்ணா நடைபெறும் இடங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அரியானா முதல்வர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்
நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உடல்நலக்குறைவால் மறைந்த
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வ பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த
