சிறப்பு பார்வை

 • All News
 • தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
May 26
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா ஒருபக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன.பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நோயியல் வல்லுநர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான லூக் மாண்டேக்னியர் கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்திடுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.வைரல் பதிவுகளுடன் லூக் நேர்காணல் வீடியோவும் இடம்பெற்று இருக்கிறது. வீடியோவில் லூக் பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை பற்றி கேள்வி எழுப்புகிறார். "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள், பெருந்தொற்று காலக்கில் தடுப்பூசி போடுவது நினைத்து பார்க்க முடியாத தவறு.உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போட துவங்கியபின் உருமாறிய கொரோனா தீவிரம் அடைவதும், பெருந்தொற்று அதிகமாவது, மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இது பதிவாகும்," என அவர் கூறுகிறார். இந்த வீடியோ, "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிர வைக்கும் நேர்காணலில், உலகின் முன்னணி நோயியல் வல்லுநர் இவ்வாறு கூறியிருக்கிறார். இனியும் நம்பிக்கையில்லை." எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை லூக் மாண்டேக்னியர் கேள்வி எழுப்புகிறார். மேலும் இது மருத்துவ பிழை என குறிப்பிடுகிறார். எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என அவர் கூறவே இல்லை. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Jan15

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்

Feb04

நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்

Feb03

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும

Feb24

பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.

Jan24

கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று

Mar08

உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு

Feb03

இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை

May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Mar21

மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்

Feb04

இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ

Feb15

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத

Jan15

 மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு

Mar11

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 09 (00:14 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 09 (00:14 am )
Testing centres