பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த்(வயது54) இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார். நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கே.வி.ஆனந்த், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.வி.ஆனந்துடன் பல படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ள கவிஞர் வைரமுத்து,
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.’’
-என்று தனது இரங்கலை கண்ணீர்க் கவிதையாக பதிவிட்டிருக்கிறார்.
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந
இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்
சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்த
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜ
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
சிம்பு கடந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வ
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ
பிக்பொஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாள
நடிகை ஷாமிலி தனது சகோதரி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோ
