யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 145 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் சிகிச்சைப் பெற்ற நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
உதவிகளைப் பெறுவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டு
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
2020 (2021) ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர ச
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
