கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.
கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு எண்ணற்ற பாட்டில்களை வாங்கினர். தெற்கு டெல்லியில் ஒரு மதுக்கடையில் நின்றிருந்த ரவீந்தர் சக்சேனா என்பவர் 8 பாட்டில்கள் வாங்கப்போவதாக கூறினார்.
வரிசையில் காத்திருந்தபோது சிலர் வரிசையை மீறி முன்னால் செல்ல முயன்றதால் வாக்குவாதமும் ஏற்பட்டது. 6 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தாலும், அது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்று மது பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்து மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, மதுபான நிறுவனங்களின் சங்கம், மராட்டியத்தை போல் டெல்லியிலும் மதுவை வீடுகளுக்கு நேரில் சென்று வினியோகிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.
காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்
திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா
சென்னையில் அனைவருக்கும்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா
