இந்தியா

 • All News
 • திருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை!
திருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை!
Apr 08
திருப்பதி மொட்டையடித்த தலைமுடி கடத்தல் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை!

திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக்கை முடி  மியான்மர் எல்லையில் கிடைத்திருப்பது ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவாஸ்தானத்திலிருந்து அந்த தலைமயிர் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டது என பல ஊகங்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் பக்தர்கள் மத்தியில் இது விவாதமாகி வருகிறது.மேலும் 1.8 கோடி மதிப்பிலான இந்த தலை மயிர் மூட்டைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன? அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? சில தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மீது இது தொடர்பாக ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது?இரண்டு மாதங்களுக்கு முன், அசாம் ரைஃபிள்ஸ் என்ற துணை ராணுவப் படையின் 23ஆம் பிரிவை சேர்ந்த செர்ச்சிப் பட்டாலியன், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இந்த தலை மயிரை தடுத்து நிறுத்தினர். இந்த தகவல் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற தேடுதல் பணியில் இந்த விஷயம் அம்பலமானது.மேலும் மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தோ- மியான்மர் எல்லையில் இந்த சட்டவிரோத கடத்த மயிர் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த பகுதியில் தேடுதல் பணி நடந்தால், போதைப் பொருளோ, தங்கமோ அல்லது வன விலங்குகளோ கண்டுபிடிக்கப்படும். ஆனால் முதன்முறையாக பாதுகாப்பு படையினர், 120 பைகள் நிறைய மனித தலை மயிரைக் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு பையிலும் 50 கிலோ எடையுள்ள மயிர் இருந்துள்ளது. மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ட்ரக் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட மயிரை ராணுவம் கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர், அந்த மயிர் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது என்று கூறியதாக ஊடகங்களிடம் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை

Mar27

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப

Jan29

ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப

Mar11

தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந

Feb04

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Feb02

தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Apr02

 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய

Feb12

தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்

Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக

Feb24

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்

Mar10

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்

Mar30

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ

Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:44 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:44 pm )
Testing centres