இந்தியா

 • All News
 • கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!
கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!
Apr 07
கொரோனா பரவல் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை பிரதமர் மோடி முதல்வர்களுடன் நாளை ஆலோசனை!

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என அறிவுறுத்தி உள்ளது.இதற்கிடையே, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசிக்க உள்ளார். கொரோனா 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.20 ஆயிரமாக சரிந்திருந்த தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. இதனால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.வைரஸ் பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே, கொரோனா பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடப்பதால் நாடு தழுவிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், இனி அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், கொரோனா 2வது அலை தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது வி.கே.பால் கூறுகையில், ‘‘நாட்டில் தொற்று நோய் சூழல் மிக மோசமான கட்டத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. முதல் அலையை காட்டிலும் கொரோனா 2வது அலையின் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வழக்கம் போல் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.2வது அலையை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். குறிப்பாக, அடுத்த 4 வாரங்கள் மிக மிக முக்கியமானது. இதில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்’’ என்றார். சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘‘சட்டீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உச்சகட்ட பாதிப்பு உள்ளது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதாக 10 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், மாகாராஷ்டிராவில் 7 மாவட்டங்களும், கர்நாடகாவில் ஒன்று, டெல்லி ஒரு மாவட்டமாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது,’’ என்றார்.50 உயர்மட்ட குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கரில் வைரஸ் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பல்வேறு நிபுணர்களை கொண்ட உயர்மட்ட மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது. இக்குழுவினர் மகாராஷ்டிராவில் 30 மாவட்டத்திலும், சட்டீஸ்கரில் 11 மாவட்டத்திலும், பஞ்சாப்பில் 9 மாவட்டத்திலும் சென்று வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத

Apr02

நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா

Mar07

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய

Apr08

திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக

Feb03

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Feb13

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற

Jan26

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ

Jan24

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த

Feb04

ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்

Mar09

இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Mar06

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட

Mar12

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த

Apr01

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:21 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 10 (20:21 pm )
Testing centres