இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. 95 வயதான இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்ந்தனர். அங்கு ஆர்.நல்லகண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அம்மருத்துவமனை 'டீன்' டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது
கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சளி உள்ளிட்ட பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆர்.நல்லகண்ணு விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய
