மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை 9.8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிருவாக பிரிவின் தலைவர் மேலதிக மன்றாடியார் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவத்தன அவர்களின் அழைப்பில் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உத்தியோக பூர்வ இல்லத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள உத்தியோகஸ்தர்கள்,நீதிபதிகள்,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்ஸி டி மேல்,காவல்துறையினர், இராணுவ அதிகாரிகள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்களினால் சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல த லிவேரா அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
மின் வெட்டு வேளையில் அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15000 ரூ
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
