உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பு, கொலன்னவை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புக்கும், வேறு சில செயற்பாடுகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அஸாத் ஸாலி தொடர்புடையவர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
ஷரிஆ சட்டம் மற்றும் நாட்டு சட்டம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை தூண்டக் கூடியது மற்றும் பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்தது. இதனால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
எனவே, தடுப்புக் காவலில் வைத்து அவரை விசாரிக்கும்போது இந்த உண்மைகள் வெளிவரும்” – என்றார்.
இதேவேளை, அஸாத் ஸாலியைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி - இரத்ம
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி க
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
