தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க செய்வது தொடர்பாக, அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்ராஜ் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாதிரி வாக்குப் பதிவை, ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்தும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபேட் கருவி மூலம் அறிந்து கொள்ளும் விதமாகவும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்துகொண்டனர்.

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி
முதல்-அமைச்சர்
நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட் 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே பள்ளிக்கல்வித்துறை
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, த
