டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி பங்கேற்றார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்படும். நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்த கொண்டாட்டங்கள், 12-ந்தேதி (நாளை) குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்குகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற எம்.பி.க்கள் அனைவரும் உதவ வேண்டும். பொதுமக்களை வாகனங்கள் மூலம் தடுப்பூசி மையத்துக்கு அழைத்துவர வேண்டும். தடுப்பூசி மையத்தில் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் உதவ வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் பிரதமர் மோடியின் திறமையான, உறுதியான தலைமைக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் பேசினார்.
தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
பிளஸ்-2 மாணவர்களுக்கு
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் சர்தார் வல்லபாய் தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ
