More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன்
கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன்
Mar 08
கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன்

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக சரிந்து வருகிறது. சமீப நாட்களாக சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள்ளே இருக்கிறது.



இதைப்போல நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் ஆகிய பிரிவினருக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியுள்ளார். டெல்லி மருத்துவ சங்கம் சார்பில் நேற்று நடந்த மருத்துவ மாநாட்டில் பேசும்போது அவர் கூறியதாவது:-



கொரோனாவை இந்தியாவில் இருந்து வேரறுக்கும் சாத்தியக்கூறுகளை பார்க்கும்போது, கொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் நாம் வெற்றி பெறுவதற்கு 3 வழிகளை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.



அதாவது தடுப்பூசி திட்டத்தில் இருந்து அரசியலை வேரறுக்க வேண்டும், தடுப்பூசிக்கு பின்னால் இருக்கும் அறிவியல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், மக்கள் தங்கள் உற்றார்-உறவினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.



பெரும்பாலான உலக நாடுகளைப்போல இல்லாமல், நாம் நிலையாக தடுப்பூசி வினியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். அவை அனைத்தும் சிறந்த செயல்திறன் மிக்கவை என நிரூபிக்கப்பட்டு உள்ளன. உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளை ஒப்பிடுகையில், இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகள் மிகவும் குறைவான பக்க விளைவுகளையே கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மருந்தகமாக தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்தவகையில் 62 நாடுகளுக்கு 5.51 கோடி தடுப்பூசி டோஸ்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டு இருக்கின்றன.



உலக அளவில் இன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்தான் போலியோவை தங்கள் நாடுகளில் ஒழிக்கவில்லை. இந்த 2 நாடுகளுக்காக ஒட்டுமொத்த உலகமும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது.



அதைப்போலவே உலகின் பிற நாடுகள் கொரோனாவை ஒழிக்கவில்லை என்றால், இந்தியாவும் கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. இதனால்தான் தடுப்பூசியில் தேசியவாதத்தை கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும்.



ஏழை மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் தொடர்ந்து கொரோனாவை பரப்பினால், நம் நாட்டில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது. எனவே தடுப்பூசியின் ஒரு நியாயமான, சமமான வினியோகம் காலத்தின் கட்டாயம் ஆகும்.



இவ்வாறு ஹர்சவர்தன் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

Mar24

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட

Feb22

புதுச்சேரி வில்லியனூர் அர

Aug28

முதல்-அமைச்சர் 

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம

Jan20

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்

Mar07

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள

Jul05

தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற

Aug08

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  த

Dec31

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்

Nov08

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில

Sep28

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம

Aug04

பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள

Mar21

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த

Sep26

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (13:03 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (13:03 pm )
Testing centres