நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 352 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிடம் மேலதிகமாக தடுப்பூசிகளை வழங்குமாறு கடந்த வியாழக்கிழமை, இலங்கை கோரியிருந்தது.
இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 500,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.
முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (
நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா