தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
லாஹூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஸ்வான் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் ஹெய்டர் அலி 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இது ரிஸ்வானின் முதல் ரி-20 கிரிக்கெட் சதமாகும்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், பெலுக்வாயோ 2 விக்கெட்டுகளையும் போர்டுயின், சிபம்லா மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்களால் திரில் வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீஸா ஹென்ரிக்ஸ் 54 ஓட்டங்களையும் மாலன் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் மற்றும் உஸ்மான் காதீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பஹும் அஷ்ரப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 64 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை லாஹூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.