கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “புனேவைச் சேர்ந்த சீரம் மையத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்தை வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்ய வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகளுக்கு 2.40 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படும்.
ஏற்கனவே 20 நாடுகளுக்கு 1.68 கோடி டோஸ் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ், பூடான், ஆப்கன், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 63 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தும் அடங்கும்.
சமீபத்தில் கனடா 10 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரியிருந்தது. ஆனால் தற்போது ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை.
இதற்கு மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வரவில்லை என்பது தான் காரணம் என கூறப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமை கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப் கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
