மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. இன்று காலை 7.45 மணயளவில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, ரெயிலின் பார்சல் பெட்டியில் தீப்பிடித்து அதில் இருந்து புகை வெளியேறுவதை பயணிகள் சிலர் கவனித்தனர். உடனடியாக செயினைப் பிடித்து ரெயிலை நிறுத்தினர். வர்கலா அருகே ரெயில் நின்றது. தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். தீ சிறிது நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. தீப்பிடித்த பார்சல் பெட்டி அகற்றப்பட்டது.
தீப்பிடித்ததை பயணிகள் உடனடியாக கண்டுபிடித்து ரெயிலை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பார்சல் பெட்டியின் முன்பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கருகி உள்ளன. மேலும் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன. சேதம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே& நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க
