உலகம்

  • All News
  • பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது ஹாங்காங்!
பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது ஹாங்காங்!
Nov 21
பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது ஹாங்காங்!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு மே மாதம் முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர் பப்பிள்’ முறையில் வெளிநாடுகளுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



அந்த வகையில், ஹாங்காங் - டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, ஹாங்காங் - டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள், பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே  பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 



இந்தியா தவிர, வங்காளதேசம், எத்தியோப்பியா, பிரான்சு, இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது. 



இந்நிலையில், டெல்லி - ஹாங்காங் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து ஹாங்காங் வந்திறங்கிய பயணிகளில் சிலருக்கு  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  



இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வரும்  டிசம்பர் 3-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் சேவையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  



கொரோனா காலத்தில் ஏர் இந்தியா விமானங்களுக்கு  5வது முறையாக இத்தகைய தடைகளை ஹாங்காங் விதித்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct07

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் ப லி

Nov16

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாட

Sep05

லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமி

Nov08

மியான்மர் நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று

Sep03

கொரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்

Sep27

பினாகா ராக்கெட் அமைப்பு, தர உத்தரவாத இயக்குனரகத்திடம்

Aug30

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ

Oct14

ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40-வது ஆண்டு நிற

Nov15

செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதான வீதிக்கான திருத்த பண

Sep18

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் பற்றி அறி

Nov05

மெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எ

Aug22

இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பா.ஜனதாவினரின் வெ

Sep20

ஜப்பானில் 1867-ல் நடந்த போஷின் போர் முதல் 2-ம் உலகப்போர் வர

Sep10

ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந

Sep20

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:40 pm )
Testing centres