ஆண்மீகம்

 • All News
 • தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி
Nov 08
தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி 2020 நடக்க உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 15ம் தேதியும் (ஐப்பசி 30), திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நவம்பர் 20 (கார்த்திகை 1) அன்று நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியின் போது ஒவ்வொரு ராசிக்கும் உத்தியோகம், தொழிலில் எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
​மேஷ ராசி :மேஷ ராசியினர் உத்தியோகத்தில் உயர்வு பெறுவதற்கான சிறப்பான காலமாகும். இதுவரை இருந்த மேலதிகாரிகளின் கண்டிப்பு குறையும். தடைகளை அறிந்து அதில் வெற்றி பெறுவதற்கான திறமையை வளர்த்து ஜொலிப்பீர்கள். பணி இடத்தில் உங்களின் சக நண்பர்களின் முரண்பாடுகளைக் கலைந்து ஒற்றுமையும், ஆதரவும் பெறுவீர்கள்

​ரிஷப ராசி :


குருவின் மிக சிறப்பான யோகத்தைப் பெறக்கூடிய ரிஷப ரசியினர் உத்தியோகம், தொழிலிலும் உன்னத நிலையை அடைவீர்கள். தொழில் முன்னேற்றம், புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய இடத்தில் பணி வாய்ப்பு கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளன. அதன் மூலம் அனுகூல நிலை ஏற்படும்.

மிதுன ராசி :தொழில், உத்தியோகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய காலம். உத்தியோகத்தில் சில அரசியல் போக்கை எதிர் கொள்ள வேண்டி வரும். சக ஊழியர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது மிக அவசியம். உங்கள் வேலையை மிக கவனமாக செய்து முடித்தால் பயம் கொள்ள தேவையில்லை..புதிய தொழில் தொடங்குதல், விருத்தி செய்தல் போன்ற முக்கிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உங்களால் இயலாத விஷங்களுக்கு வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்.இணைய வழி பணிகளை செய்பவர்களுக்கு முன்னேற்றமும், சிலருக்கு பயணங்களும் ஏற்படும்.

கடக ராசி :பல நல்ல மாற்றங்களை கடக ராசியினர் பெறலாம். வேலை விஷ்யாமாக மற்றவர்களுடன் விழிப்புடன் செயல்படுவது மிகவும் நன்மையை தரும். சக பணியாளர்களிடம் பேச்சு, செயலில் கவனமாக இருப்பதால் நன்மை உண்டாகும். உங்களுக்கான வேலை, பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைப்பதைத் தவிர்க்கவும்.

​சிம்ம ராசி :உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த இலக்கை அடைவதிலும், எதிர்பார்த்த ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எந்த விஷயமாக இருந்தாலும் மனக்கவலையை விரட்டி, சுறுசுறுப்புடன் செயல்பட உங்களின் இலக்கை எளிதாக அடையலாம். சுற்றுலா, கேளிக்கை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு.

​கன்னி ராசி : உங்களுக்கு சாதகமான பலன்கள் தொழில், உத்தியோகத்தில் கிடைக்கும். நீங்கள் விரும்பிய உயரத்தை அடையவும், உழைப்புக்கேற்ற பலன் உண்டாகும்.உங்களின் உத்தியோகத்தில் சில அலைச்சல்களை ஏற்படும் ஆனால் அதன் மூலம் உங்களுக்கு நல்ல அனுபவம் ஏற்படும். உங்களின் திறமையை சரியாக வெளிப்படுத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெறுவீர்கள்.தொழிலில் இருந்த மறைமுக எதிரிகள் நீங்கி வளர்ச்சி நிலை ஏற்படும்.

​துலாம் ராசி :தொழில், உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்களின் கவனமாக செயல்பாட்டின் காரணமாக உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பணி மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும். மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும்.உத்தியோகத்தில் உங்களின் திட்டங்கள், செயல்பாடுகளை முன்கூட்டியே சொல்ல வேண்டாம். உங்களின் வளர்ச்சி தடைப்படக்கூடும்.

​விருச்சிக ராசி :உத்தியோகத்தில் உங்களுக்கு இதுவரை புறக்கணிக்கப்பட்ட பதவி உயர்வு விரைவில் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. அதே போல் உங்கள் திறமைக்கு ஏற்ப வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் கடன் பிரச்னைகள் தீரும். பல்வேறு விதத்தில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம்.

​தனுசு ராசி :உத்தியோகத்திலும், தொழிலிலும் உங்களுக்கு பல்வேறு வகையில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் மேலதிகாரிகளின் பாராட்டும், ஆதரவும் மனதில் உத்வேகத்தைத் தரும். மன நிம்மதியும், திருப்தியையும் தரும்.வேலை விஷயமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இதுவரை இருந்த பணி சார்ந்த தடைகள் விலகி முன்னேற்ற பாதை ஏற்படும்.

​மகர ராசி : உத்தியோகஸ்தர்கள் நினைத்த செயலை சிறப்பாக முடிப்பதற்கான வாய்ப்பும், சூழலும் அமையும். நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உத்தோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறும். சம்பள உயர்வும், பதவி உயர்வு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பதற்கான தருணங்கள் ஏற்படும்

​கும்ப ராசி :உங்களுக்கு பலவழிகளிலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் சாதகமான நிலையும், ஒத்துழைப்பு கிடைப்பதால் நீங்கள் விரும்பிய உயரத்தை அடையக்கூடும். புதிய இடத்தில் வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

​மீன ராசி :மீன ராசிக்கு கவனமும், சோம்பலை தவிர்க்க நீங்கள் எதிர்பார்த்த உயரத்தை எட்டி விடலாம். எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். அதே போல் எதிர்பார்த்த புதிய பணியிட கோரிக்கை உண்டாகும்.சிலருக்கு உத்தியோகம் தொடர்பான வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:37 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (12:37 pm )
Testing centres