சினிமா

 • All News
 • அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்!
அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்!
Nov 03
அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்!

‘லேடி சூப்பர்ஸ்டார்” நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. உலகளவில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP) தளத்தில் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.“மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப்பில் மிகப்பெரும் ஜனத்திரள் கொண்டு இக்காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர்.யாருமே எதிர்பாராவகையில் பெரும் ஜனத்திரள் கொண்ட இக்காட்சியை படக்குழு ஒரே நாளில் படமாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு நடத்துவதென்பது எந்த ஒரு திரைப்படகுழுவும் நினைத்தே பார்த்திராத பணியாகும். நல்லவேளையாக படத்தின் இப்பகுதியை இந்த பொது முடக்க காலத்திற்கும் முன்னதாகவே படமாக்கியதில் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது.“மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி, NJ சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார்.இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ளார். நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் RJ பாலாஜி முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஊர்வசி, மௌலி,அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் நவம்பர்14, 2020 அன்று தீபாவளி நன்நாளில் ப்ரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகிறது.இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov23

சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் ச

Sep26

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும

Sep27

பாடும் நிலா எஸ்பிபி மறைவை அடுத்து இந்தியா முழுதும் அவ

Nov15

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வார காலமாக தீ

Sep06

கடந்த சில நாட்களாக விஜய், ரஜினி, சூர்யா என சினிமா நடிகர

Oct14

இந்நிலையில் சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்

Sep02

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்த

Aug23

இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய, கொரோனா கண்ணாலே என்ற ப

Sep16

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு

Aug23

விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவ

Sep24

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம

Oct16

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து

Sep26

எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு நடிகர

Nov23

என் பெயர் ஆனந்தன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில்

Sep06

கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் த

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:21 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 24 (11:21 am )
Testing centres