இந்தியா

 • All News
 • காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு
காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு
Oct 18
காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர்  சித்தராமையா பெங்களூருவில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:பெங்களூரு ராஜராஜேசுவரி நகர் சட்டசபை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குசுமா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.குசுமா வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது நானும், அவரது தந்தையும் உடன் சென்றோம். டி.கே.சிவக்குமார் வருவதாக சொன்னதால் அவருக்காக நான், குசுமா, அவரது தந்தை ஆகியோர் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பாக காரில் காத்திருந்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது.ஆனால் விதிமுறையை மீறியதாக குசுமா மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயர் இடம் பெறவில்லை. எனது பெயரை குறிப்பிடாமல், ஒரு அடையாளம் தெரியாத நபர் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான் எதிர்க்கட்சி தலைவர். நான் ஒரு அடையாளம் தெரியாத நபரா? என்பதை போலீசார் விளக்க வேண்டும்.ராஜராஜேசுவரி நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குசுமாவுக்கு தொல்லை கொடுக்க வேண்டும், அவரை மனரீதியாக தொல்லைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் துறையை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதனை மாநில மக்கள் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.நான், குசுமா உள்ளிட்டோர் காலையில் 11.45 மணியளவில் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய ராஜராஜேசுவரி நகர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றோம்.ஆனால் காலை 11.15 மணியளவிலேயே குசுமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வரும் முன்பாக போலீசில் புகார் கொடுத்த தேர்தல் அதிகாரி யார்?, எதற்காக முன்கூட்டியே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

காங்கிரஸ் தலைமை குறித்தும் கட்சியில் செய்ய வேண்டிய மா

Aug31

ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாந

Aug24

கடந்த ஐந்தாம் தேதி சென்னை சூளைமேடில் உள்ள தனியார் மரு

Aug28

காங்கிர காரிய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற

Oct19

வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாம

Sep03

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை

Sep09

சம்பவ இடத்திற்கு விரைந்த குமரன் நகர் போலீசார் வாலிபரை

Sep13

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் திமுக மாவட்ட இளைஞர

Sep03

கர்நாடகா காவல்துறை டிஜிபி அவருடைய கை துப்பாக்கியை சுத

Oct14

ஏற்கனவே காங்கிரஸ் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 60 தொக

Sep19

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு

Oct18

திருவள்ளூர் அருகே ரூ.8 கோடி பூர்வீக சொத்தை ஒரு தம்பதி, ப

Oct14

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவு

Sep20

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சியில்

Sep17

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்தி

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:26 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:26 am )
Testing centres