சினிமா

 • All News
 • எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி!
எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி!
Oct 16
எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி!

எதிர்ப்புகள் வலுத்த வந்த நிலையில் 800 படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. தமிழர்களின் மன உணர்வை மதித்து இந்த முடிவெடுத்த விஜய்சேதிபதிக்கு நன்றி தெரிவித்து, அவர் மேல் அன்பு கூடுகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கீரா.ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.படத்தின் டைட்டில் ‘800’ என்று வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் விஜய்சேதிபதி அப்படத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுத்து வருகின்றனர்.இலங்கை கிரிக்கெட் வீரரில் படத்தில் நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் மனதையும் புரிந்துகொண்டு அவர் நடந்தால் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தெரிவித்திருக்கிறார்.விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், நடிகை ராதிகா, நடிகர் அரவிந்தன் சிவஞானம் உள்ளிட்டோர் கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும். அவனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நடிக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறிவருகிறார்கள். விஜய் சேதிபதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றே பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனும் கூறியிருக்கிறார்.ஆனாலும் பெரும்பாலான தமிழர்கள் தன்னை நடிக்கக்கூடாது என்றே சொல்லி வருவதால், 800 படத்தில் இருந்து விலகுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. தனக்கு நெருங்கிய இயக்குநர்களை அழைத்து அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.ஆலோசனையின் முடிவில் விஜய்சேதுபதி, 800 படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில்,’’நடிகர் விஜய் சேதுபதி மீது அன்பும் கூடுகிறது. தமிழர்களின் மன உணர்வை மதித்தமைக்கு நன்றி’’ என்று இயக்குநர் கீரா தெரிவித்திருப்பதால், 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவதாக முடிவெடுத்துவிட்டார் என்பது உறுதியாகிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep14

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்பட நடப்பு த

Sep24

கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தய

Aug26

தமிழில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘காதலில் ச

Sep16

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு

Sep17

இயக்குனர் பாபு சிவன் மறைவிற்கு நடிகர் மற்றும் இசையமைப

Oct14

இந்நிலையில் சென்னை திநகரில் இன்று செய்தியாளர்களை சந்

Aug23

விஜய்யின் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவ

Sep02

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்த

Sep06

கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் த

Sep18

நடிகர் சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி போராட

Sep06

கடந்த சில நாட்களாக விஜய், ரஜினி, சூர்யா என சினிமா நடிகர

Oct19

ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்

Aug24

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப்பெரிய நிறுவனங்களில் வே

Sep27

பாடும் நிலா எஸ்பிபி மறைவை அடுத்து இந்தியா முழுதும் அவ

Sep22

தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி ப

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:00 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:00 am )
Testing centres