சமையல்

 • All News
 • வாழைக்காய் வறுவல் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க!
வாழைக்காய் வறுவல் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க!
Oct 08
வாழைக்காய் வறுவல் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க!

சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், எதுவாக இருந்தாலும் அதற்கு இந்த ஒரு வாழைக்காய் வறுவல் சைடிஷாக வைத்தால் போதும். சாப்பாடு வயிற்றுக்குள் தானாக இறங்கிவிடும். சுலபமான முறையில் காரசாரமான வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட செய்து பரிமாறினால், ஸ்நாக்ஸாக கூட இதை குழந்தைகள் சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு ருசி கிடைக்கும்.முதலில் 2 வாழைக் காய்களை எடுத்து தோல் சீவி, காம்புகளை நறுக்கி, வட்ட வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். ரொம்பவும் மெல்லிசாக வெட்டிக் கொல்ல வேண்டாம். ரொம்பவும் தடிமனாகவும் வெட்டிக் கொள்ள வேண்டாம். 1/2 இன்ச் அளவு தடிமனில் வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய வாழைக்காய்களை தண்ணீரில் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.அதன் பின்பாக ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் தண்ணீரை நன்றாக சூடு பண்ணி, அதில் சிறிதளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய்களை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, தண்ணீரை வடித்து வாழைக்காய்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வாழைக்காய் ரொம்பவும் குழையக் கூடாது. சரியான பக்குவத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.இந்த வாழைக்காயோடு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்,  பொட்டுக்கடலை தூள் – ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து முதலில் இந்த மசாலா பொருட்கள் எல்லாம் வாழைக்காயில் நன்றாக படும்படி கிளறிவிட வேண்டும்.உங்கள் கைகளாலேயே பக்குவமாக வாழைக்காய் உடையாமல் எல்லா பக்கத்திலும் படும்படி மசாலா பொருட்களை கலந்து விடவேண்டும். இறுதியாக சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு மேலே பிழிந்து, வாழைக்காய்களை ஒரு குலுக்கு குலுக்கி, எடுத்து அப்படியே இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு ஊறவைத்து விடுங்கள்.உங்களுடைய வீட்டில் ஃபிரயிங் பேன் இருந்தால், அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் வாழைக்காய்களை வறுத்து எடுக்கலாம். அப்படி இல்லை என்றால் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, தீயை மிதமாக வைத்து தயாராக இருக்கும் மசாலாத் தடவிய வாழைக்காய் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்தால், வாழைக்காய் ஃப்ரை தயார்! உங்களுக்கு இந்த குறிப்பு படித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.  


Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:57 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 25 (07:57 am )
Testing centres