இந்தியா

 • All News
 • தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்!
Sep 15
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் - சுகாதாரத்துறை மந்திரி தகவல்!

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று பாராளுமன்றத்தில் கொரோனா பரவல் குறித்து உரையாற்றினார்.அவர் பேசுகையில் கூறியதாவது:-இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 414 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271 ஆகவும் உள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதம் ஆகும். 35 லட்சத்து 42 ஆயிரத்து 663 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இது 77.65 சதவீதம் ஆகும்.நாட்டில் மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரபிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒடிசா, அசாம், கேரளா, குஜராத் ஆகிய 12 மாநிலங்கள் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 10 கோடியே 84 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த மாத்திரைகளை 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஆயுஷ் அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மிதமான நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஆயுஷ் மருந்தை பரிந்துரைப்பதற்கான திட்டம் உள்ளது.உலகம் முழுவதும் 2 கோடியே 79 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 9 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், சாவு 3.2 சதவீதமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3,328 பேர் பாதிக்கப்படுகிறார்கள். 55 பேர் இறக்கிறார்கள். இது உலக அளவில் ஒப்பிடும் போது மிகவும் குறைவு ஆகும்.ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவரிடம் இருந்து 1 முதல் 14 நாட்களுக்குள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.இந்தியாவில் 30-க்கும் அதிகமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பல்வேறு நிலையில் இருந்த போதிலும் 3 தடுப்பூசிகள் ஒன்றாவது, இரண்டாவது மற்றும் 3-வது கட்ட சோதனையில் உள்ளன. கொரோனா தடுப்பு மருந்தை வாங்கவும், வினியோகிக்கவும் மத்திய அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.உலக அளவில் சுமார் 145 தடுப்பு மருந்துகள் சோதனைக்கு முந்தைய கட்டத்திலும், 35 தடுப்பு மருந்துகள் சோதனை கட்டத்திலும் உள்ளன.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா உலக சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு மற்ற நாடுகளுக்கும் உதவி வருகிறது.இவ்வாறு மந்திரி ஹர்ஷ வர்தன் கூறினார்.கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள், பரிசோதனைகள், ஊரடங்கை அமல்படுத்தியது, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வர செய்த ஏற்பாடுகள் போன்ற விவரங்களையும் அவர் தனது உரையின் போது தெரிவித்தார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep03

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணி

Sep26

பெருங்குடி அருகே ஜிம் உரிமையாளருடன் சென்ற மனைவியை மீட

Oct18

நாகை அருகே வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரிடர

Sep28

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தே

Sep23

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையத்தி

Aug27

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு அந்நாட்டுடன் இந்தியா

Oct01

நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்

Aug29

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை

Oct18

ஊட்டியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 30 லட்ச ரூபாய

Oct11

நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் கேரளா மக

Sep28

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பக

Sep22

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் இருசக

Oct17

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மாந

Sep06

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்கள

Sep25

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் ம

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:58 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:58 am )
Testing centres