இந்தியா

 • All News
 • திமுக அனுமதி கொடுத்தது: செயல்படுத்தியது எல்லாம் அதிமுகதான் கே.என்.நேரு பேட்டி!
திமுக அனுமதி கொடுத்தது: செயல்படுத்தியது எல்லாம் அதிமுகதான் கே.என்.நேரு பேட்டி!
Sep 17
திமுக அனுமதி கொடுத்தது: செயல்படுத்தியது எல்லாம் அதிமுகதான் கே.என்.நேரு பேட்டி!

சட்டமன்றத்தில் முதல்வரின் உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்கின்றனர், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை ஒளிபரப்ப செய்ய அரசே தடுக்கிறது என்று திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என் நேரு குற்றம்சாட்டினார்.தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.என்.நேரு, ’’தந்தை பெரியாரை தமிழக மக்கள் மனதில் ஏந்த வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று வளமுடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியார் தான் காரணம். எனவே அவரை நினைவில் கொள்ள வேண்டும்.சட்டமன்றத்தில் முதல்வரின் உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்கின்றனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை ஒளிபரப்பு செய்ய அரசே தடுக்கிறது. எங்களது கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.திமுக ஜல்லிக்கட்டுக்கு எப்படி மத்திய அரசை நாடி அனுமதி வாங்கினார்களோ, அதே போல் நீட் விவகாரத்தில் இது எங்களுக்கு தேவை இல்லை என்று தமிழக அரசு மத்திய அரசை நாட வேண்டும்’’என்றவரிடம்,’’சூர்யாவிற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்ற கேள்விக்கு, மத்தியில் ஆட்சி இருக்கிறார்கள் . அவர்கள் கையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இருப்பதால் வருமான வரித்துறை போன்ற துறைகள் அவர்கள் கையில் இருப்பதால், இதுபோன்ற திரைப்பட நடிகர்களை மிரட்டுகின்றார்கள்’’என்றார்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்களே என்ற கேள்விக்கு,’’காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்படி ஏதும் நடைபெறவில்லை’’’என்றார்.கிசான், நீட் விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘’தமிழக விவசாயத் துறை அமைச்சரே இது தொடர்பாக பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவரே கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் ஆட்சி மாறி மாறி நடைபெற்று வந்தது. எல்லாவற்றையும் திமுகதான் கொண்டு வந்தது என்று சொல்வது முறையல்ல, திமுக ஆட்சியில் ஆய்வு செய்ய தான் அனுமதி கொடுத்தோம், செயல்படுத்த அல்ல. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையெழுத்து போட்டது அதிமுக தான்,ஜெயலலிதா தான்’’என்றார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை அதிகாரிகள் பவர் கிளைட

Aug29

ஜம்முவில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வேலிக்கு அ

Sep26

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செ

Aug24

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு

Aug29

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை: பாமக சிறப்பு ப

Aug31

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரு

Sep15

புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நார

Aug26

டெல்லியில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அரசு முன்னெச்சர

Sep17

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக

Sep23

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையத்தி

Sep16

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தொண்டா்களால் தாக்கப்பட்ட ம

Oct13

இராமநாதபுரம் – முயல் தீவில் இருந்து இலங்கைக்கு படகி

Sep22

சாலையில் தூங்கும் மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயம

Aug22

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும் வி

Sep25

பாடகர் எஸ். பி. பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள ப

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (09:09 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (09:09 am )
Testing centres