இந்தியா

 • All News
 • சூர்யாவின் பார்வையும் அடுத்த ஆண்டு மாறும் – அண்ணாமலை
சூர்யாவின் பார்வையும் அடுத்த ஆண்டு மாறும் – அண்ணாமலை
Sep 16
சூர்யாவின் பார்வையும் அடுத்த ஆண்டு மாறும் – அண்ணாமலை

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.சூர்யாவின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வந்த நிலையில், தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை தனது ட்வீட்டில், “12th fail ஆகிட்டோம்னு வருசா வருசம்தான் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. எதுக்கு 12th வச்சுருக்கீங்க? அது போலதான் #NEET entrance. இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்ககூடிய மருத்துவ படிப்பை பெறுவதற்கான வாய்ப்பாக பாருங்கள்” என்று பதிவிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது உண்மையில் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கம் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. தமிழக பாஜக துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ‘’சூர்யாவிற்கு எதிராக நான் பதிவிடுவது போல் பேஸ்புக்கில் பதிவிட்ட போலி கணக்குகளை முடக்கிவிட்டோம்’’என்றார்.சரி,நீங்க நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தை ஏற்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ’’நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தை ஏற்கவில்லை. மற்றபடி, சூர்யாவுக்கு கருத்து கூறும் உரிமை இருக்கிறது. அவருடைய கருத்து கடுமையாக இருந்தது. அடுத்த ஆண்டு நீட் தேர்வு குறித்த சூர்யாவின் பார்வை மாறும் என்று நம்புகிறேன்’’ என்றார் அழுத்தமாக.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug20

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்கலக்குறிச்சி

Sep16

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Sep17

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளிய

Apr29

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வ

Sep03

இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

May29

இந்தியாவின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையானது சீனாவி

Sep15

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய

Sep10

மும்பையில் நடிகை கங்கனா ரனவத்தின் அலுவலகம் விதிமுறை ம

Sep07

தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு

Feb02

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்

Sep14

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்ட போராட்டம் நடத்தி நீட் தே

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:08 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (06:08 am )
Testing centres