இந்தியா

 • All News
 • அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்.. ஒரு பேருந்தில் எவ்வளவு பயணிகள் அனுமதி தெரியுமா ?
அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்.. ஒரு பேருந்தில் எவ்வளவு பயணிகள் அனுமதி தெரியுமா ?
Sep 01
அரசு பேருந்துகள் சேவை தொடக்கம்.. ஒரு பேருந்தில் எவ்வளவு பயணிகள் அனுமதி தெரியுமா ?

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.இதில் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மண்டலங்கள் இடையே பொதுப்போக்குவரத்து ஜூன் மாதம் முதல் துவங்கியது. கோவை கோட்டத்தில் உள்ள கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 50 சதவீத அரசு பேருந்துகள் ஜூன் மாதம் இயங்கியது.அதன் பின் மீண்டும் ஜூலை மாதத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டங்களுக்குள் பேருந்து சேவையை தொடங்க வழிகாட்டு நடைமுறைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்தது.அதன்படி கோவையில் 50 சதவிகித பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தேவைக்கு ஏற்ப பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அரசு வழிகாட்டு நடைமுறைகளின் படி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள், சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளன.பேருந்துகளில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு பஸ்சில் 24 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் பயணிகள் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யவும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க பயணிகளை அனுமதிக்கவும், பயணிகளின் பயன்பாட்டுக்காக பேருந்தில் சனிடைசர் வைக்கவும் வழிகாட்டு நடைமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.கோவையில் சுங்கம், ஒண்டிபுதூர் உள்ளிட்ட பேருந்து பணிமனைகளில் இருந்து அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் தற்போது வரை இயக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவ

Sep08

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ம

Sep03

சீனாவுடனான எல்லைப் பதட்டத்தை அடுத்து லடாக்கில் இந்தி

Oct04

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குறிப்பிட்

Sep18

அதிமுக , திமுகவுக்கு மாற்றாக வரும் பாஜகவுக்கு புதுரத்

Oct13

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே தேசிய நெடுங்சாலைய

Sep07

தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு

Sep17

லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்குக்கரைப் பகுதியில

Oct20

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை கண்டித்து திர

Oct07

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு,

Sep03

இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்

Oct16

தஞ்சை மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 5.48 கோடி

Sep06

செலவின துறையின் அனுமதி இல்லாமல் இனி மத்திய அரசில் புத

Sep22

மாநிலங்களவையில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை

Sep30

கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவத்தினரின் அத்துமீறல

Share News

Sri Lanka

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

   
 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:54 am )
Testing centres

World

 • Active Cases

  1.172

   
 • Total Confirmed

  4.459

 • Cured/Discharged

  3.274

   
 • Total DEATHS

  13

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 24 (08:54 am )
Testing centres