உலக விளையாட்டு

  • All News
  • லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது
லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது
Jun 13
லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது

ஸ்பெயினில் புகழ்பெற்ற லாலிகா கால்பந்து தொடர் கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அங்கு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் லாலிகா போட்டியை தொடர்வதற்கு ஸ்பெயின் அரசு பச்சைகொடி காட்டியது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு லா லிகா கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. செவில்லி நகரில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் செவில்லா கிளப் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்ஸ் அணியை தோற்கடித்தது. முதல் கோலை லுகாஸ் ஒகாம்போஸ் (56-வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியும், 2-வது கோலை பெர்னாண்டோ தலையால் முட்டியும் அடித்தனர்.இந்த சீசனில் பங்கேற்றுள்ள 20 அணிகளில் பார்சிலோனா கிளப் 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் கிளப் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. செவில்லா 28 ஆட்டங்களில் விளையாடி 14 வெற்றி, 8 டிரா, 6 தோல்வி என்று 50 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக் கிறது.லா லிகா கால்பந்து போட்டியில் இப்போதைக்கு ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செவில்லா- ரியல்பீட்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் தான் நடந்தது. வழக்கமாக ரசிகர்களின் கரவொலி அரங்கையே அதிர வைக்கும். ஆனால் நிசப்தமான சூழலில் விளையாடியது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. முன்னதாக சுமார் 200 ரசிகர்கள் மைதானம் முன் திரண்டு இருந்தனர். அவர் களை போலீசார் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.லாலிகா தலைவர் ஜாவியர் டெபாஸ் கூறுகையில், ‘நாங்கள் மீண்டும் லாலிகா போட்டியில் விளையாடுவோம் என்று எப்போதும் நம்பினேன். அதன்படியே தொடங்கி விட்டோம். இந்த சீசன் ஜூலை 19-ந்தேதி நிறைவடைகிறது. உரிய பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைசி கட்டத்தில் 10 முதல் 15 சதவீத ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்’ என்றார். நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் நாளை களம் இறங்குகின்றன.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun15

மலோர்கா நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேற

Aug14

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்

Jun05

பிரித்தானியாவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வ

Jun04


விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வ

Jun04

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போடபட்ட  நாடு தழுவிய ஊ

Jun06

பிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முக்கியம

Jan31

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்ன

Feb16

ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

Jun13

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டே

May28

* கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டு இருக்கு

Jan28

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் சீன் வில்லியம்ஸ், சிக்க

Jun02

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத

Jun06

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவரா

Jun15

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ப

Jun12

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:58 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:58 am )
Testing centres