இந்தியா

  • All News
  • உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு!
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு!
Jul 30
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு!
சுற்றுச்சூழல் பாதிப்பு வரைவு அறிவிக்கை பற்றி மக்கள் கருத்து கூற அவகாசம் அளித்த  டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்படும் திட்டங்கள், புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்கனவே கிடப்பில் இருக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 2006’ல், மத்திய அரசு பல்வேறு அதிரடி திருத்தங்களை செய்துள்ளது.

‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு 2020’ வரைவு அறிவிக்கை என்ற பெயரில் கடந்த மார்ச் 23ம் தேதி இது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த வரைவு அறிவிக்கையின்படி, இனிமேல் எந்த திட்டங்கள் பற்றியும் மக்களிடம் கருத்து கேட்பது கட்டாயம் கிடையாது

இந்த புதிய வரைவு அறிவிக்கை, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதனால் நாட்டின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது.

இதை விசாரித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த  வரைவு அறிவிக்கை பற்றி, நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.

இதற்காக, இந்த அறிவிக்கையை தமிழ் உட்பட 22 பிராந்திய மொழிகளில் இதை மொழி பெயர்த்து, 10 நாட்களுக்குள் வெளியிட வேண்டும். மேலும், இது பற்றி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தங்கள் கருத்துக்களை கூற, பொதுமக்களுக்கு அரசு அவகாசம் வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.அதில், ‘மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவையும், அதற்காக வழங்கப்பட்ட அவகாசத்தையும் ரத்து செய்ய வேண்டும். இது, அரசின் கொள்கை சார்ந்த விஷயமாகும்.

இதில், நாட்டின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களும் அடங்கியுள்ளன. அதேபோல், இந்த வரைவு அறிவிக்கையை மொழி பெயர்த்து வெளியிடுவதையு்ம் ஏற்க முடியாது,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Feb18

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ப

Jun13

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோ

Jun04

கேரளாவில் கடந்த 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய ந

Jan31

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Feb05

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்த

Feb04

டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

Jan05

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு த

Jun29

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம்

Jun15

   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊர

Jun09

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடக

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:45 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:45 am )
Testing centres