coronavirus

  • All News
  • தடுப்பு மருந்து சோதனை வெற்றி அடைந்ததாக அறிவிப்பு!
தடுப்பு மருந்து சோதனை வெற்றி அடைந்ததாக அறிவிப்பு!
Jul 20
தடுப்பு மருந்து சோதனை வெற்றி அடைந்ததாக அறிவிப்பு!

கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் கிடைத்துள்ளது. 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.



இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி லான்சட் மருத்துவ இதழ் மூலம் இந்த பரிசோதனை முடிவுகள் பொதுத் தளத்திற்கு வரும்.



உலகளவில் சுமார் 100 கொரோனா தடுப்பு மருந்துகள் சோதனை அளவில் உள்ளன. அதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்து, சோதனை நடவடிக்கையில் முன்னணியில் உள்ளது. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பு மருந்தின் உரிமமானது, AstraZeneca என்னும் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்துதான் கொரோனா தடுப்பில் செய்யப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சிகளில் முதன்மையானது என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.



அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த Moderna Inc நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கொரோனா தடுப்பு மருந்து குறித்து மிக நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். 45 மனிதர்கள் மீது சோதனை நடத்தியதில், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக கூறினர். இந்த நிறுவனமானது, கடந்த மே மாதம், கொரோனா தடுப்பு மருந்திற்கான இரண்டாம் நிலை மனித பரிசோதனைகளை ஆரம்பித்தது. வரும் ஜூலை 27 ஆம் தேதி, மூன்றாம் நிலை மனித பரிசோதனையை ஆரம்பிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul20

கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டு

Aug13

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி,

Aug13

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணி

Jul18

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ல

Jul20

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பாதிப்பால் வடம

Jul20

 கர்நாடகாவில் ஒரே நாளில் 3,648 பேருக்கு கொரோனா தொற்று உற

Aug13

நாட்டில் சமூக மட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும

Jul20

அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பேர் க

Aug13

கொவிட்-19 வைரஸ் சமூகத்தினுள் பரவுவதை முற்றாகத் தடுக்க ம

Jul18

ராஜாங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:08 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:08 am )
Testing centres