இந்தியா

 • All News
 • எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை...
எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை...
Jul 18
எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை...

 நாளை தமிழகம் முழுவதும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18.7.2020 இரவு 12.00 மணி முதல் 20.7.2020ம் தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி 19.7.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவரச மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330 / 044-23452362 அல்லது 9003130103 எனும் எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan10

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்

Aug11

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவுடன் டெங்கு, எலிக்கா

Jan29

இந்தியாவின் முன்னணி பட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால

Jun15


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியத

May22

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

May19

தண்டையார்பேட்டை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை

Jun15

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும்

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

May19

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பா

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Jun02

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

May18

 திருச்சியில்  இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக ரயி

Jan31

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:47 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:47 am )
Testing centres