இந்தியா

 • All News
 • கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும்
கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும்
Jun 15
கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும்

உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து உள்ளது.அங்கு நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2,134 பேர் புதிதாக கொரோனவிடம் சிக்கி உள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 1,300-ஐ நெருங்கியுள்ளது.தினமும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகள் வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிய நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால், துணைநிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, பேரிடர் மேலாண்மை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், டெல்லியில் வேகமெடுத்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப்பின் டெல்லியில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தனது டுவிட்டர் தளத்தில் அமித்ஷா வெளியிட்டார்.அதில் அவர் கூறுகையில், ‘கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் டெல்லிக்கு உடனடியாக 500 ரெயில் பெட்டிகளை வழங்க மத்திய மோடி அரசு முடிவு செய்து உள்ளது. இந்த பெட்டிகளால் 8 ஆயிரம் படுக்கைகள் கிடைக்கும். மேலும் கொரோனாவுக்கு எதிரான அனைத்துவித மருத்துவ உபகரணங்களையும் இந்த பெட்டிகள் கொண்டிருக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.டெல்லியில் அடுத்த 2 நாட்களில் கொரோனா பரிசோதனை இருமடங்காக உயர்த்தப்படும் எனக்கூறியுள்ள அமித்ஷா, இது 6 நாட்களில் 3 மடங்காக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

Aug22

இதுதொடர்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அவர் வெள

May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Aug14

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ந் தேத

Aug26

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருப

Jan24

இந்திய குடியரசு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) க

Sep11

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை ப

Aug26

சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகற்கொள்ளைத

Sep18

தமிழகத்தில் சட்ட பேரவை தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நட

Sep09

பா.ஜ.கவின் ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர் சுப்ரமணிய சுவா

Sep20

திருப்பதியில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏழுமலை

Sep09

 சென்னையில் 1,29,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நி

Jan09

திருப்பத்தூர் மருத்துவமனையில் ஜனவரி 8ந் தேதி மாலை, ஒருவ

Jan24

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது சிலைய

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:13 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:13 am )
Testing centres