இந்தியா

 • All News
 • முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு  பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
Jun 09
முதல் முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

 கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சையை பரிந்துரை செய்தது. பிளாஸ்மா தெரபியில், கொரோனா வைரசிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தில் இருந்து எடுத்த நோய் எதிர்ப்பு திறனை பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. கொரோனா வைரசை எதிர்த்து போராட உடல் தயாராகிறது. தமிழகத்திலும் இந்த முறையை சோதனை செய்வதற்கு ஒரு சில மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் மதுரை அரசு மருத்துவமனையும் ஒன்று. அதன்படி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நோயாளிகளிடம் இருந்து பிளாஸ்மா பெறுவதற்கான முயற்சிகளில் மதுரை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.பிளாஸ்மா சிகிச்சை

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேரிடம் இருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மா சேகரிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது மதுரையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழு முடிவு செய்து, அந்த முதியவரிடம் சம்மதம் வாங்கினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு 200 மி.லி. பிளாஸ்மா நேற்று உடலில் செலுத்தப்பட்டது. இதுபோல் மீண்டும் அவருக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்காக இந்த பிளாஸ்மா உடலில் ஏற்றப்பட இருக்கிறது.இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையை சேர்ந்த 72 வயது முதியவருக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்படி அவருக்கு முதல் கட்டமாக பிளாஸ்மா உடலில் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார். மதுரையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதல் முறை” என்றனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

பீகாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி

Jan30

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த்

Aug31

நாளை முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்திருப்

Sep10

நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி, மேற்கு வங்கத்தில் செப்ட

Sep17

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவு பரவியதற்கு முக்க

Jan29

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்த

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

Jan29

இந்தியாவின் முன்னணி பட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால

Aug23

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள

May31

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்

Jan28

தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்

Sep11

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் இர

Aug20

கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Aug24

அசாமில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத்

Jun29

கொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:41 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:41 am )
Testing centres