இந்தியா

  • All News
  • சென்னையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
சென்னையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
Jun 08
சென்னையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 33,239-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,46,628லிருந்து 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 9,983 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் பலியாகியுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை விஞ்சி 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது; தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 17,527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 528 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 286-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,149 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 22,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 77 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 15,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 6,07,952 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Jun04

கேரளாவில் பசியுடன் வந்த கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்ன

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

Jun11

 தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள், தமிழ் உச்சரிப்ப

May16

 தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒடியுள்ள பகுதிக

Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

Jun02

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை கட்டணம

May18

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 ம

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Jun08

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

Jun15

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொ

Apr29

கோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக

Jan13

கடந்த 8-1-2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:35 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:35 am )
Testing centres