இந்தியா

 • All News
 • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.86 லட்சமாக அதிகரித்துள்ளது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.86 லட்சமாக அதிகரித்துள்ளது
Jun 11
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.86 லட்சமாக அதிகரித்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 286579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 9996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 357 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8102 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுஇதுவரை 141029 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 49.1 சதவீதமாக உள்ளது. நேற்று மட்டும் 5823 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 137448 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36841 பேருக்கும், டெல்லியில் 32810 பேருக்கும், குஜராத்தில் 21521 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

டில்லி ஜாமியா பல்கலை. யில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்

Aug14

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்..

Sep06

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தன்னுடைய தாய

Feb05

தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று (பெப் 5) குடமுழுக்கை முன்னி

Jan08

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையா

Jun01

தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுட

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

Aug24

பச்சமலையின் குகை போன்ற ஒரு பகுதி மட்டுமே இண்டெர்நெட்

May17

தமிழகத்தில்  நேற்று,16.05.2020, டாஸ்மாக் கடைகளில்  ர

Sep06

கேரளாவின் திருவனந்தபுரத்தில் அட்டிங்கல் பகுதி அருகே 5

Jan05

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக

May16

கன்னியாகுமரிக மாவட்ட அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க

Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

Sep06

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்கள

Sep13

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் திமுக மாவட்ட இளைஞர

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (16:27 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (16:27 pm )
Testing centres