இந்தியா

 • All News
 • தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு
Jun 05
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.தற்போது உலகளவில் மோட்டார் வாகனத்துறையில் தலைசிறந்த 11 முன்னிலை பெற்றுள்ள நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.கொரோனா பரவல், உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அம்முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர், ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு’ என்ற குழுவை தலைமை செயலாளர் தலைமையில் அமைத்துள்ளார்.சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது ‘வோக்ஸ் வேகன்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹெர்பர்ட் டையஸ், ‘ஸ்கோடா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பெர்ன்ஹார்டு மையர், ‘மெர்சிடஸ் பென்ஸ்’ நிறுவன தலைவர் ஓலா கல்லேனியஸ், ஆடி கார் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்கஸ் டியூஸ்மன், ‘ஹோண்டா’ நிறுவனத்தின் தலைவர் டகாஹிரோ ஹச்சிகோ, ‘டொயோடோ’ நிறுவனத்தின் தலைவர் அக்கியோ டொயோடா, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஜிப்ரே, ‘லக்ஸ்ஜென் டயோயுவான்’ மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹூ ஹை சாங், ‘ஜாக்குவார் லேண்ட்ரோவர்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ரால்ப் டி. ஸ்பெத், ‘ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் செவர்லெட்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மேரி டி.பர்ரா மற்றும் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் எலோன் மஸ்க் ஆகிய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்- அமைச்சர் அவர்கள் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும்உறுதியளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

Jan09

தமிழகம் முழுவதும் வரும் 11- ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெ

Feb01

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

Jan11

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், கச்சா எண்ணெ

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

May16

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்

Jan28

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதா

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

Jun12

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு விடு

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

Jun05

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ

Jan04

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

Apr29

கோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:59 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:59 pm )
Testing centres