இந்தியா

 • All News
 • கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கிய மு‌.க.ஸ்டாலின்
 கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கிய மு‌.க.ஸ்டாலின்
Jun 01
கலைஞரின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கிய மு‌.க.ஸ்டாலின்

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியை திமுக தலைவர் மு‌.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்டத்தில், கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ,  ஏற்பாடு செய்திருந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.அதன் விவரம் வருமாறு: சோழிங்கநல்லூர் மத்தியப் பகுதியில், பகுதிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.அரவிந்த் ரமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,097 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதியில், மாவட்டத் துணைச் செயலாளர் தா.விஸ்வநாதன் ஏற்பாட்டில் பாலவாக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12,500 குடும்பங்களுக்கும், சோழிங்கநல்லூர் மேற்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் பெருங்குடி - திருமலை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும்,

வேளச்சேரி மேற்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் சு.சேகர் ஏற்பாட்டில் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார். சைதை கிழக்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் இரா.துரைராஜ்  ஏற்பாட்டில் மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும், ஆலந்தூர் வடக்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் பி.குணாளன் ஏற்பாட்டில் தர்மராஜா கோயில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,000 குடும்பங்களுக்கு ஒரு கோடியே, 41 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினார். அதேபோல, கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் 9-வது செக்டார், 46-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில்  21,500 குடும்பங்களுக்கும், 1508 சின்னத்திரை தொழிலாளர்கள், திரைப்பட தயாரிப்பு தொழிலாளர்கள், துணை இயக்குனர்கள் என திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், வாகை சந்திரசேகர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் க.தனசேகரன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், மு.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வின் வெற்றிக்கு

Jun13


கன்னடம், கலாசாரம், சுற்றுலா, இளைஞர் நலன் மற்றும் விள

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Jan31

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை

May19

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பா

May31

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய வளர்ச்சி வங்கியின் த

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

Feb04

டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர

Jun10

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்ய

Jan24

'மறக்க வேண்டியதை நடிகர் ரஜினி ஏன் தற்போது நினைவூட்டுகி

Jan28

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Jan08

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:18 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:18 pm )
Testing centres