இந்தியா

  • All News
  • கேரளாவில் கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்கிய வாலிபர் கைது
 கேரளாவில் கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து  வம்பை விலை கொடுத்து வாங்கிய வாலிபர் கைது
May 24
கேரளாவில் கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து வம்பை விலை கொடுத்து வாங்கிய வாலிபர் கைது

 அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்று பொருளே ஆகிவிட்டது. ஆனால், கேரளாவில் நண்பனுக்காக கஞ்சாவை அல்வாவுக்குள் மறைத்து கொடுத்து  வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார் ஒரு வாலிபர்.  கேரள மாநிலம்  பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவரது  உயிர் நண்பரான ஒருவர் ஐதராபாத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.  இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் இவரது படிப்பு முடிந்தது. ஆனால்  லாக் டவுன் காரணமாக இவரால் ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரளாவுக்கு திரும்பினார். வெளிமாநிலங்களில் இருந்து கேரளா திரும்புபவர்கள் 14 நாள் தனிமை முகாமில்  இருக்க வேண்டும்.  



இதையடுத்து அந்த வாலிபர் அடூர் அரசுப்பள்ளியில்  அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமில் இருந்தார். இவருக்கு கஞ்சா பழக்கம் உண்டு.  ஆனால் அரசு முகாமில் கஞ்சாவுக்கு எங்கே போவது?  இதையடுத்து தன்னுடைய  நண்பன் வினோத்தை தொடர்பு கொண்ட அவர், தனக்கு உடனடியாக கஞ்சா வேண்டும் என்று  கேட்டுள்ளார். ஆனால் அரசு முகாம் என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும்  உண்டு. எப்படி நண்பனின் விருப்பத்தை நிறை வேற்றலாம் என யோசித்த வினோத்துக்கு ஒரு ஐடியா வந்தது.



இதையடுத்து  ஒரு பாக்கெட் அல்வாவை வாங்கி  அதற்குள் கஞ்சாவை  மறைத்து வைத்தார். பின்னர் முகாமுக்குச் சென்ற வினோத்,   அங்கிருந்த ஊழியர்களிடம் பார்சலை கொடுத்து அதில் அல்வா இருப்பதாகவும், அதை  தனது நண்பனிடம் கொடுக்குமாறும் கூறியுள்ளார்.  அவர்களும் அதை வாங்கி  வைத்துக் கொண்டனர். பின்னர் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அல்வா  பாக்கெட்டுக்குள் ஒரு சிறிய பொட்டலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.  அதைத் திறந்து பார்த்தபோது அந்த பொருள் கஞ்சாவாக  இருக்கலாமோ  என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த  பாதுகாப்பு ஊழியர்கள் அடூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்  விரைந்து சென்று பரிசோதனை நடத்தியதில் அந்த பாக்கெட்டில் இருந்தது கஞ்சா என  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வினோத்தை கைது செய்தனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Aug11

மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,014

Jun05

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நர

May26

கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைய

May25

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக

Jan26

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக

Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

Jun04

கேரளாவில் பசியுடன் வந்த கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்ன

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

May15

மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீத

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

Jan28

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:31 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:31 am )
Testing centres