உலகம்

 • All News
 • அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசிய கொடி!
அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசிய கொடி!
May 22
அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசிய கொடி!

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.தற்போது வரை அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 16.2 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றாலும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் மருத்துவத் துறை திணறி வருகிறது.இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.“கொரோனா வைரசால் உயிரிழந்த அமெரிக்கர்களின் நினைவாக அடுத்த மூன்று நாட்களில் அனைத்து மத்திய அரசு அலுவலக கட்டிடங்கள், தேசிய நினைவுச் சின்னங்களில் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி உத்தரவிட்டுள்ளேன்.மேலும் நாட்டிற்கு சேவை செய்து உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவு நாளையொட்டி அவர்களை கவுரவிக்கும் வகையில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்” என ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை எட்ட உள்ள இந்த துயரமான நாளில், அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதா

Jun02

இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் சீனா

Feb16

உலக அளவில் பெரும்பான்மையான இணையதளவாசிகளால் ‘பேஸ்புக்

Jun01

சிவில் விமான போக்குவரத்து இயக்குனநகரம் (டிஜிசிஏ) கடந்

Feb08

கொரோனா வைரசை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கே

Feb05

மலேசியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்

Mar17

அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களுக்கு ஐரோப்பிய ஒன

Feb06

கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்த கேத்தே பசி

Feb04

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஒரு அங்கமாக செயல்பட்டுவரும் ஒ

Jan26

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி அந்த நா

May10

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பிரிட்டனி

May22

கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தை

Jan27

சீனாவில் கரோனா வைரஸின் பரவும் திறன் அதிகரித்துள்ளதாக

Jan29

அல்ஜீரியாவில் சுகோய் சூ-30 ரக ராணுவ விமானம் விபத்துக்குள

May31

இந்தியாவில் இருக்கும் சீனர்களை விமானம் மூலம் மீண்டும

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:39 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:39 am )
Testing centres