உலகம்

 • All News
 • சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் போர் முழக்கம், சீனாவின் எச்சரிக்கை..!
சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் போர் முழக்கம், சீனாவின் எச்சரிக்கை..!
May 22
சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் போர் முழக்கம், சீனாவின் எச்சரிக்கை..!

எங்களை சீண்ட வேண்டாம். பதிலடி கடுமையாக இருக்கும் என்று அமெரிக்காவிற்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.சீனாவின் வுகான் நகரின் விலங்குகள் சந்தையிலிருந்து உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவியது என்று சீனா கூறிவருகிறது.எனினும், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, இந்த வைரஸைக் கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார இழப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். ஆதலால், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா கூறி வருகிறது.அதேபோன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் அவர் பகிரங்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.இந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஹாங் யேசூயி செய்தியாளர்களிடம் பேசிய போது,“உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதற்கும் சீனாதான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும்அமெரிக்கா ஏதேனும் சட்டநடவடிக்கை எடுத்தாலோ அல்லது மனு கொண்டு வந்தாலோ அதை சீனா கடுமையாக எதி்ர்ப்போம். அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், சொந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாதுகொரோனா வைரஸைப் பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. ஏராளமான தியாகங்களைச் செய்து கொரோனா போரில் சீனா வென்றுள்ளது.சீனாவில் கொரோனா தொற்று ஏற்றப்பட்டதிலிருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களைும் சீனா தெரிவித்துவந்தது. உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறினோம், உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம்.கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது, எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம், அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் இதை அவர்களிடம் விட்டுவிட்டு, நாம் கருத்துக்கள் கூறுவதை வி்ட்டுவிடுவோம் என்று கடுமையாக அவர் பேசியிருக்கிறார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையி

Jun02

கொரோனா தொற்றின் மையப்புள்ளியான அமெரிக்காவில் உயிரி

Feb14

இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் முக்கிய தகவல்கள

Jan24

அமெரிக்காவில் குழந்தைகளை பெற்றெடுக்க வரும் வெளிநாட்ட

Feb01

ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டில் பரவி வரும் மர்ம க

Feb07

விண்வெளியில் மிக நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்

May29

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Feb11

ரஷ்யாவில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதள பக்கத

Jan23

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க

Jan23

கிரீஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கதர்னி செகலாரோ

Jan29

கரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலை

Jan23

சிங்கப்பூரில் வூஹான் நகரின் கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்

Jan25

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேற வேண்டும்

Jan23

புதிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்க

May30

 அமெரிக்காவில் போலீசாரால், கருப்பின தொழிலாளி ஒருவர்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:54 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:54 am )
Testing centres