இந்தியா

 • All News
 • அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய அரசு முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பை சந்தித்துள்ளது.
அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய அரசு முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பை சந்தித்துள்ளது.
May 22
அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய அரசு முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பை சந்தித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அரசுப்பேருந்துப் போக்குவரத்தை கேரள அரசு இயக்காமல் இருந்தது. மீண்டும் அரசுப்பேருந்து போக்குவரத்தை தொடங்கிய அரசு முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பை சந்தித்துள்ளது. தீவிரமான சமூக விலகலைக் கடைபிடித்து குறைந்த நேரத்தில், குறைந்த அளவு பேருந்துகளை புதன்கிழமை இயக்கினர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கேரள அதிகாரிகள் வருத்தமடைந்துள்ளனர். புதன்கிழமையன்று ஏறக்குறைய 1300 பேருந்துகளை மாவட்டங்களுக்குள்ளே மட்டும் கேரள அரசு இயக்கியது. காலை 7 மணி முதல் 11 வரையிலும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டன.அனைத்து பேருந்து பணிமனைகளிலும் பேருந்துகளுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நடத்துனர் அமரும் இடத்தில் பயணிகளுக்காக சானிடைசரும் வைக்கப்பட்டது. பயணிகள் தேவைப்பட்டால் சானிடைசரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தீவிரமான சமூக விலகலைக் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. பேருந்தில் இருக்கும் இருக்கையைப் பொறுத்து 24 முதல் 28 பயணிகள் மட்டுமே அமர அனுமதி்க்கப்பட்டது. எந்த பயணியும் நின்று கொண்டு பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இத்தனை கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பேருந்து இயக்கிய முதல்நாளே ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டது அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்நாளான புதன்கிழமை மட்டும கேரள அரசுப்பேருந்துக்கு கிடைத்தது ரூ.35 லட்சம் ஆகும். இதில் ஊழியர்கள் ஊதியம், டீசல், காப்பீடு, சானிடைசர் என மொத்தம் கி.மீ ஒன்றுக்கு பேருந்து இயக்கச் செலவு ரூ.45 வரை செலவானது. குறைவான பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கி.மீ ரூ.16 மட்டுமே கிடைத்தது. இதனால் ஒரேநாளில் அரசுக்கு ரூ.59 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 11-ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் தலைமைச்செயலக ஊழியர்களுக்காக மட்டும் பேருந்துகளை கேரள அரசு இயக்கி வருகிறது. ந்த சிறப்புப் பேருந்தில் கட்டணம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 50 சதவீதம் கட்டணம் அதிகரி்ப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சில இடங்களில் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கட்டண உயர்வை அமல்படுத்துவதிலும் கேரள அரசுக்கு சி்க்கல் எழுந்துள்ளது. இந்த சூழலில் அடுத்துவரும் நாட்களில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கும்பட்சத்தில் ஏற்படும் இழப்பைப் பொறுத்து முக்கிய முடிவுகளை கேரள அரசு எடுக்கும் என தெரிகிறது. தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கட்டணத்தை உயர்த்தி பேருந்துகளை இயக்கினால் மக்கள் தாக்குகிறார்கள், கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசுக்கு எங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளோம். 20 பயணிகளுக்கு மேல் ஏற்றாமல் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லைஎனத் தெரிவித்துள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா டில்லி மர

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

Jan10

சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழ

Apr29

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வ

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Jan06

திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், மகளிரணிச் செயல

May28

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது

Jan25

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்க

May27

திருவனந்தபுரம்: 

 

கேரள மாநிலத்தில் இதுவரை ம

May25

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக

May19

டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி கா

May17

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆம்பன் புயலா

Jan11

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், கச்சா எண்ணெ

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:58 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:58 am )
Testing centres