இந்தியா

  • All News
  • ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்த கொரோனா நோயாளிகள்
ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்த கொரோனா நோயாளிகள்
May 20
ஆன்லைனில் பிரியாணி ஆடர் செய்த கொரோனா நோயாளிகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகள் சிலர், அசைவ உணவு வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுள்ளனர். அதை மறுத்த டாக்டர்கள், புரத சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். இது அசைவம் கேட்டவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



இதையடுத்து 4பேர், தந்தூரி சிக்கன், சிக்கன் பிரை, சிக்கன் பிரியாணி என்று அசைவ உணவுகளை  ஆன்லைனில் ஆர்டர் செய்து, வரவழைத்த சம்பவம் அரங்கேறியது. மருத்துவமனைக்கே பார்சல் வரவே டாக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘நேற்று ஆன்லைன் உணவு நிறுவன ஊழியர் ஒருவர்,  அரசு மருத்துவமனை கொரோனா வார்டு முன்பு பேக்கிங் பொருட்களோடு நின்றிருந்தார். சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்தபோது, கொரோனா சிகிச்சையில் இருக்கும் 4 பேர் ஆர்டர் செய்தது அம்பலமானது. கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது.



இப்படி ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருந்த 4 பேர்தான்,  தந்தூரி சிக்கன், பிரியாணி, சிக்கன்பிரை கேட்டு ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு உணவுகளை எடுத்து வந்த ஆன்லைன் நிறுவன ஊழியருக்கு, அவர்கள் இருப்பது கொரோனா சிகிச்சை வார்டு என்பது தெரியவில்லை. அவரை திருப்பி அனுப்பியதோடு, சம்பந்தப்பட்ட நோயாளிகளையும் எச்சரித்துள்ளோம்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep07

தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு

Sep09

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில

Jun08

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற

May23

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அண

Jun02

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில

Sep18

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக

May16

சொந்த ஊருக்கு பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது

Sep08

1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, இதுவரை அமலில்

Sep22

மாநிலங்களவையில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Sep20

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் சுலோசனா சு

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

Sep15

புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நார

Aug30

பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கடீலுக்கு

Sep15

கொரோனா பாதிப்பால் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முத

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:38 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:38 am )
Testing centres