இலங்கை

 • All News
 • மாடு மேய்க்க சென்றவர்களை பிரித்து மேய்ந்த விசேட அதிரடி படையினர்....!
மாடு மேய்க்க சென்றவர்களை பிரித்து மேய்ந்த விசேட அதிரடி படையினர்....!
May 20
மாடு மேய்க்க சென்றவர்களை பிரித்து மேய்ந்த விசேட அதிரடி படையினர்....!

மட்டக்களப்பு மாவட்டம் வடமுனை ஊத்துச்சேனை மீராண்ட வில் பிரதேசத்தில் மாடு மேய்க்க சென்ற சிலர் விசேட அதிரடிப் படையினரினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று (19) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.நேற்று முன்தினம் (18) திங்கள் கிழமையன்று மேற்படி பிரதேசத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, காவல் இருந்த மூவரே தாக்கப்பட்டுள்ளனர்.அந்த வழியாக ரோந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் அவர்களை அழைத்து அப் பிரதேசத்தினை விட்டு விலகி செல்லுமாறு பணித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.குறித்த பிரதேசத்தில் மரக் கடத்தல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், தாமும் அவற்றில் ஈடுபடுவதாக தெரிவித்தே அதிரடிப்படையினர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடு அங்கு அதிகமாக காணப்படும் நிலையில், அவற்றை தடுக்கும் நடவடிக்கையாக அதிரடிப் படையினர் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை, நீண்ட காலமாக பெரும்பாலான கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளின் மேச்சல் தரையாக மீராண்ட வில் பிரதேசத்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸ் சாஜன் ஒருவர் அடித்து கொ

Jan22

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத

May31

கல்வி அமைச்சின் மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர

Jan31

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக்காட்சி நேற்றையதினம் ஆரம்ப

May26

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆற

May09

எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்

Feb07

அக்கரைப்பற்றில் இம்மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ள 2020ம் ஆண்

May25

நாடு முழுவதும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்ப

May12

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடக்கப்பட்டுள்ள கட்டுந

May25

வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்

May23

நாட்டின் பல பாகங்கள் உள்ளிட்ட மேல், சப்ரகமுவ,மத்திய மற

May21

ஜுன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபா வ

May24

தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் ப

May28

மே 31ம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில

May24

கொரோனாவுக்காக மருந்து ஒன்று கண்டுபிடிக்கும் வரை அதன்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:24 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:24 am )
Testing centres