இந்தியா

 • All News
 • சடலங்களுடன் லொறியில் பயணித்த தொழிலாளர்கள்.....!
சடலங்களுடன் லொறியில் பயணித்த தொழிலாளர்கள்.....!
May 20
சடலங்களுடன் லொறியில் பயணித்த தொழிலாளர்கள்.....!

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காயமடைந்த தொழிலாளர்களும் ஒரே லொறியில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.கொரோனா பரவலை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் வேலையிழப்பு, பொருளாதாரம் பாதிப்பு, பசி, வைரஸ் பயம் போன்ற காரணங்களால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட அவர்கள் 50 நாள்களுக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதும் கடந்த சனிக்கிழமை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு லொறியில் புறப்பட்டுள்ளனர்.சுமார் 60 தொழிலாளர்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் அவ்ராயா எனும் பகுதியில் இந்த லொறி பயணித்துக்கொண்டிருக்கும்போது எதிரே வந்த மற்றொரு லொறி மீது மோதி, இரண்டு லொறியும் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் அவ்ராயா விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரு திறந்த ட்ரக்கில் வைத்து அதனுடனேயே விபத்துக்குள்ளானவர்களும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியுள்ளது.இதைப் பார்த்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை நடைபெறாமல் தடுத்திருக்கலாம்.உத்தரப்பிரதேச முதல்வரும் பீகார் முதல்வரும் எங்கள் தொழிலாளர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பான வேறு வாகனத்தில் ஏற்றி ஜார்க்கண்ட் எல்லைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரான போகாரோ செல்ல நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

Jun29

கொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத

Jan29

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

Aug14

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்..

May24

 அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Jul18

 நாளை தமிழகம் முழுவதும் எந்தவித தளர்வும் இன்றி முழு

Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

May27

திருவனந்தபுரம்: 

 

கேரள மாநிலத்தில் இதுவரை ம

Jun08

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச்

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:29 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:29 am )
Testing centres