இந்தியா

 • All News
 • மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பதில் சிக்கல்- கவர்னர் கையில் உள்ளது
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பதில் சிக்கல்- கவர்னர் கையில் உள்ளது
Apr 30
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பதில் சிக்கல்- கவர்னர் கையில் உள்ளது
மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்டு நவம்பரி முடிவுக்கு வந்த போது சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே கடும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் எம்.எல்.ஏ.ஆகவோ எம்.எல்.சி.யாகவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சட்டப்படி முதல்வராக நீடிக்க வேண்டுமெனில் அவர் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.ஆகவோ எம்.எல்.சி.ஆகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வரும் மே மாதம் 27ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.ஆகவோ எம்.எல்.சியாகவே இல்லாத உத்தவ் தாக்கரே பதவி நீடிப்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. இடங்களுக்கு கடந்த 24ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் போட்டியிட்டு எம்.எல்.சியாக உத்தவ் திட்டமிட்டிருந்தார் ஆனால் கரோனாவினால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி மும்பையில் நடந்த மகாராஷ்ட்ரா அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில கவர்னருக்கான 2 எம்.எல்.சி இடங்கள் ஒதுக்கீட்டில் ஒரு இடத்தில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வேண்டும் என கவர்னர் கோஷ்யாரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கவர்னர் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கவர்னர் கோஷ்யாரியை துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் சில அமைச்சர்கள் சந்தித்து உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சியாக நியமிக்க கோரிக்கை விடுத்தனர் ஆனால் கவர்னர் எந்த உறுதியையும் அளித்ததாகத் தெரியவில்லை.

இதனையடுத்து உத்தவ்வை எம்.எல்.சி.ஆக தேர்வு செய்ய கவர்னருக்கு இரண்டாவது முறையாகப் பரிந்துரைத்துள்ளது.

கவர்னர் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை எனில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிடும்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Feb08

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை முன்னாள் பிரதமர் மன்ம

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

Jan08

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

Jan25

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலைய

Jan31

இந்தியா எங்கள் மீது போர்தொடுத்தால், அந்தப் போரை நாங்கள

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

Jan25

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.ப

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

May26

சென்னை: தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவ

Jan04

குடியுரிமைக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:45 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:45 am )
Testing centres