இந்தியா

 • All News
 • ஊரடங்கால் திருச்சியில் திண்டாடும் தொழிலாளர்களுக்கு காவிரிப் பாலத்தில் உணவு; தன்னார்வலர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது
ஊரடங்கால் திருச்சியில் திண்டாடும் தொழிலாளர்களுக்கு காவிரிப் பாலத்தில் உணவு; தன்னார்வலர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது
Apr 29
ஊரடங்கால் திருச்சியில் திண்டாடும் தொழிலாளர்களுக்கு காவிரிப் பாலத்தில் உணவு; தன்னார்வலர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் வழங்குகிறது
ஊரடங்கு உத்தரவால் தொழிற் சாலைகள் உணவகங்கள் மூடப்பட்டதாலும் கட்டுமானப் பணி கள் நிறுத்தப்பட்டதாலும் தங்குமிடம் இழந்து திருச்சியில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரீரங்கம் காவிரிப் பாலத்தை தங்களின் வாழ்விடமாக மாற்றியுள்ளனர். இரவு நேரங்களில் பாலத்தின் மீது படுத்து உறங்கும் இவர்கள் பகல் நேரங்களில் பாலத்தின் அடியில் தங்கியுள்ளனர்.

இவர்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு தயாரிக் கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு பொட்டலமாக விநியோகிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சில நூறு பேர் மட்டுமே இவ்வாறு உணவு பெற்று வந்த நிலையில் தற்போது இவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு 3 வேளையும் உணவு விநியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து உணவு விநி யோகிக்கும் தன்னார்வலர்கள் கூறியது:

ஆரம்பத்தில் வடமாநில தொழிலாளர்களும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இங்கு இருந்த
னர். அவர்களுக்கு உணவு விநியோகித்தோம். இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சாப்பாட்டுக்கே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட உள்ளூர் மக்களும் இங்கு வரத் தொடங்கியுள்ளனர். காவிரிப் பாலத்துக்குச் சென்றால் எப்படியும் உணவு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இவர் களிடம் உள்ளது. அதை நிறை வேற்றும் வகையில் அரசுடன் இணைந்து நாங்களும் செயல் பட்டு வருகிறோம் என்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம் கேட்டபோது காவிரிப் பாலம் மட்டு மல்ல. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இதுபோல தங்கியுள்ளோர் ஆதரவற்றோர் முதியோர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரவர் இருப்பிடங்களுக்கேச் சென்று உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் சமையல் கூடம் அமைக்கப் பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் தினமும் 3,246 பேருக்கும், மாநகர் பகுதியில் தினமும் 3,550 பேருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு விநியோகிக்கப்படுகிறது. தன்னார்வலர்கள் இதுவரை 34 ஆயிரம் கிலோ அரிசி வழங்கியுள்ளனர். அதில் இது வரை 18,500 கிலோ அரிசியைப் பயன்படுத்தி உள்ளோம்.

இதுதவிர தொழிற்சாலைகள் வீடுகளில் குழுக்களாக தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் 4,181 பேருக்கு 10 கிலோ அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை விநியோகித்து வருகிறோம். அதேபோல 1,445 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. யாருக் காவது உணவு கிடைக்காத நிலை இருந்தால் 1097 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என்றார்.

மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ கூறிய போது காவிரிப் பாலத்தில் ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தாலும் முறையாக சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக காவல் துறையினர் அவர்களை உட்கார வைக்கின்றனர். அதன்பிறகே உணவு விநியோகிக்கப் படுகிறது. இதுதவிர நிரந்தரமாக அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காவல் துறையினரால் முகக் கவசம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan08

மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ்,

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

May23

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

Jan25

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலைய

May20

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டு, ச

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

Jan10

சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழ

May20

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவு

Feb05

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வ

Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:09 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:09 am )
Testing centres