இந்தியா

 • All News
 • சிகிச்சை பெற்ற அனைவரும் வீடு திரும்பினர்; கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு- தீவிர நடவடிக்கையால் கட்டுக்குள் வந்ததாக ஆட்சியர் தகவல்
சிகிச்சை பெற்ற அனைவரும் வீடு திரும்பினர்; கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு- தீவிர நடவடிக்கையால் கட்டுக்குள் வந்ததாக ஆட்சியர் தகவல்
Apr 29
சிகிச்சை பெற்ற அனைவரும் வீடு திரும்பினர்; கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு- தீவிர நடவடிக்கையால் கட்டுக்குள் வந்ததாக ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 பேரும் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்குத்தான் ஈரோடு மாவட்டத்தில் முதன்முதலில் கொரோனா தொற்று உறுதியானது. மார்ச் 29-ம் தேதி கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி 20 ஆகவும் ஏப்ரல் 5-ம் தேதி 28 ஆகவும் ஏப்ரல் 8-ம் தேதி 32 ஆகவும் உயர்ந்தது.

70 பேர் பாதிப்பு

ஏப்ரல் 9-ம் தேதி ஒரே நாளில் 26 பேருக்கு நோய் தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 15-ம் தேதி 70 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை.

மறுபுறம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இருகட்ட சோதனைக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 65 பேர் குணமடைந்த நிலையில எஞ்சியிருந்த 4 பேரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா பாதிப்படைந்த பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் மட்டும் உயிரிழந்து ள்ளார்.

ஊரடங்கில் தீவிரம்

டெல்லி சென்று திரும்பியவர்களை அடையாளம் காணுதல் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் கண்டறிவதில் காவல்துறையும் மாவட்டநிர்வாகமும் இணைந்து தீவிரமாக செயல்பட்டன.

மருத்துவக்குழுக்கள் மூலம் பரிசோதனை மேற்கொண்டது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறாதவாறு காவல்துறை பாதுகாப்பு என்ற இணைந்த செயல்பாட்டால் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டது. மேலும் அரசின் அனைத்துத் துறையினரும் ஊரடங்கை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டினர்.

இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் கூறும்போது ஈரோட்டில் கொரோனா பாதிப்புக் குள்ளான 70 பேரில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். முதியவர் மட்டும் இறந்துள்ளார். 14 நாட்களில் புதிய தொற்று எவருக்கும் ஏற்படவில்லை. இதன் மூலம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது என்றார்.

எஸ்பி சக்திகணேசன் கூறும்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அங்கு 28 நாட்கள் நிறைவடைந்த பின்னர் புதிய தொற்று இல்லை என்ற நிலையில அங்கு தளர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகள

Jan09

திருப்பத்தூர் மருத்துவமனையில் ஜனவரி 8ந் தேதி மாலை, ஒருவ

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Feb05

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வ

Jan23

அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு, போடோலாந்து தேசிய ஜனநாயக

Feb06

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க வ

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

Jan10

பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில்

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

Jan13

கடந்த 8-1-2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவி

Jan13

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Dec21

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:01 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:01 am )
Testing centres